மண்ணச்சநல்லூர், உப்பிலியபுரம் பகுதிகளில் சாராயம் காய்ச்சிய, ஊறல் போட்ட 6 பேர் கைது

மண்ணச்சநல்லூர், உப்பிலியபுரம் பகுதிகளில் சாராயம் காய்ச்சிய, ஊறல் போட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-01 19:00 GMT
சமயபுரம்,

மண்ணச்சநல்லூர், உப்பிலியபுரம் பகுதிகளில் சாராயம் காய்ச்சிய, ஊறல் போட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாராயம் காய்ச்ச ஊறல்

மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் சாராயம் காய்ச்ச படுவதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று பார்த்த போது, வடக்கிபட்டியைச்சேர்ந்த தமன்னான் (வயது 46) என்பவர் அப்பகுதியில் உள்ள முள்காட்டில் சாராயம் காய்ச்ச பானையில் ஊறல் போட்டிருப்பது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து அந்த ஊறலை கைப்பற்றிய போலீசார் பானையை உடைத்து ஊறலை அழித்தனர். மேலும் தமன்னானை போலீசார் கைது செய்து, சாராயம் காய்ச்ச வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் இதே பகுதியில் சாராயம் காய்ச்சியதாக 2 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

சாராயம் அழிப்பு

இதுபோல் உப்பிலியபுரம் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர் அப்போது, அங்கு சாராயம் காய்ச்சிய நெட்டவேலம்பட்டியை சேர்ந்த மணி (45), சுப்ரமணி (44), சதீஸ்(34) ஆகியோர் கையும் களவுமாக பிடிபட்டனர். உப்பிலியபுரம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

மேலும் தனது தோட்டத்தில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருந்த நாகநல்லூர் காட்டுக்கொட்டையை சேர்ந்த நடேசனை (56) கைது செய்த போலீசார், பேரலில் இருந்த 350 லிட்டர் சாராய ஊறல் அழித்தனர். இதுபோல் சிலைப்பிள்ளையார் புத்தூர் காவிரி ஆற்றுப்படுகையில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டதாக அதே பகுதியை சேர்ந்த மோகனசுந்தரத்தை (46) காட்டுப்புத்தூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்