ஒரே நாளில் 232 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை,
மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 2,010 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 203 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.