ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மின்சார வாரிய ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-01 18:24 GMT
புதுக்கோட்டை, ஜூன்.2-
புதுக்கோட்டை மின்வாரியத்தில் சிறப்பு நிலை ஆக்க முகவராக பணியாற்றி வருபவர் பாஸ்கரன். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர் பணி ஓய்வு பெற இன்னும் ஓராண்டுகள் காலம் உள்ளது. இந்த நிலையில் அவரை கீரனூர் கோட்டம் டி.நல்லூருக்கு பணியிட மாற்றம் செய்து உள்ளனர். இந்த உத்தரவினை பிறப்பித்த புதுக்கோட்டை மின்சார மேற்பார்வை பொறியாளர், தலைமை பொறியாளர் ஆகியோரை கண்டித்தும், பாஸ்கரனின் பணியிட மாற்ற உத்தரவை திரும்ப பெற கோரியும் புதுக்கோட்டையில் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மதியம் மின்சார வாரிய ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் போராட்டக்குழு தலைவர் திவியநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சண்முகவேல், நடராஜன், லட்சுமணன் உள்பட நிர்வாகிகள், மின்சார வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் பணியிட மாற்ற உத்தரவை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் தொடரும் என்றனர்.

மேலும் செய்திகள்