கொல்கத்தாவில் இருந்து திருவாரூருக்கு நெல் கொள்முதல் பணிக்காக 20 லட்சத்து 80 ஆயிரம் சாக்குகள் சரக்கு ரெயிலில் வந்தன

கொல்கத்தாவில் இருந்து திருவாரூருக்கு நெல் கொள்முதல் பணிக்காக 20 லட்சத்து 80 ஆயிரம் சாக்குகள் சரக்கு ரெயிலில் வந்தன.

Update: 2021-06-01 18:22 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால் குறுவை, சம்பா, கோடைக்கால சாகுபடியில் அறுவடையின் போது தேவைக்கு ஏற்ப மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதில் நெல் கொள்முதல் பணியின் போது சாக்கு என்பது தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம்.

20 லட்சத்து 80 ஆயிரம் சாக்குகள்

இதனை கருத்தில் கொண்டு கொல்கத்தாவில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு தேவையான சாக்குகள் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து கொல்கத்தாவில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 4,160 பண்டல் சாக்குகள் திருவாரூருக்கு நேற்று வந்தது. இதில் பண்டலுக்கு 500 சாக்குகள் வீதம் 20 லட்சத்து 80 ஆயிரம் சாக்குகளை லாரிகள் மூலம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது.

மேலும் செய்திகள்