சாவிலும் இணை பிரியாத தம்பதி

ஆவுடையார்கோவில் அருகே மனைவி இறந்த அரை மணிநேரத்தில் கணவரும் இறந்தார். சாவிலும் தம்பதி இணைபிரியவில்லை.

Update: 2021-06-01 18:17 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள அமரடக்கி-வெளியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி காளியம்மாள்  (வயது 70). இந்த நிலையில் நேற்று காளியம்மாள் திடீரென இறந்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராமன் சோகத்துடன் காணப்பட்டார். சுமார் அரைமணிநேரம் அழுதபடி நின்று இருந்த ராமன் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மனைவி இறந்த அரை மணிநேரத்தில் கணவரும் இறந்ததால் அந்த குடும்பத்தினர் மேலும் சோகம் அடைந்தனர். தம்பதி இருவரும் எப்போதும், ஒற்றுமையாகவும், பாசமாகவும் இருந்து வந்தனர். இந்த நிலையில் சாவிலும் தம்பதி இணைபிரியவில்லை. இந்த தம்பதிக்கு மதியழகன், செல்லத்துரை, பாலமுருகன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்