விபத்தில் பெற்றோரை இழந்ததால் பரிதவித்து வரும் 3 பெண் குழந்தைகள்

விபத்தில் பெற்றோரை இழந்ததால் 3 பெண் குழந்தைகள் பரிதவித்து வருகின்றனர்.

Update: 2021-06-01 18:07 GMT
அன்னவாசல், ஜூன்.2-
அன்னவாசல் அருகே விபத்தில் பெற்றோரை இழந்ததால் 3 பெண் குழந்தைகள் பரிதவித்து வருகின்றனர். அரசு உதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்தில் பலி
அன்னவாசல் அருகே உள்ள வாதிரிப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது50). இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு சுவேதா (15), மதுமிதா (14), அபிதா (9) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் துக்க வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பழனிச்சாமியும், மல்லிகாவும் கார்மோதி இறந்தனர். இதனால் பெண் குழந்தைகள் 3 பேரும் நிர்கதியானார்கள்.
அனாதை...
பெற்றோரை இழந்த 3 பெண் குழந்தைகளும் கதறி அழுது கொண்டிருப்பது அனைவரையும் கண்கலங்க செய்தது. பழனிச்சாமியின் 3-வதுமகள் அபிதா கதறி அழுதபடி கூறும்போது, பெற்றோரை இழந்த எங்களுக்கு எந்த சொந்தமும் இல்லை. இப்பொழுது நாங்கள் அனாதையாகிவிட்டோம் எங்களுக்கு அரசுதான் உதவ வேண்டும் என்றார். இந்த 3 பெண் குழந்தைகளின் பரிதாப நிலை சமூக வலைதளங்களில் பரவியது.
 இதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில்
வாதிரிப்பட்டிக்கு சென்ற இலுப்பூர் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) முத்தரசு குழந்தைகளுக்கு உதவி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

மேலும் செய்திகள்