மரத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் சாவு

இளையான்குடி அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் இறந்தார்.

Update: 2021-06-01 18:00 GMT
இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள கோச்சடை கிராமத்தை சேர்ந்தவர் வாசு. இவரது மகன் பாரதி (வயது 22). இவர் தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான புளியமரத்தில் பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார்.எதிர்பாராதவிதமாக மரத்தின் கிளை முறிந்து கீழே விழுந்தார். இதனால் பலத்த காயமடைந்தவரை உறவினர்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து மானாமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்