கொரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Update: 2021-06-01 17:38 GMT
புதுக்கோட்டை, ஜூன்.2-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 453 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.
கொரோனா சிகிச்சை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதேநேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 164 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 453 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து274 ஆக உயர்ந்தது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 682 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பாதித்த ஒருவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.
அரிமளம்-ஆதனக்கோட்டை
அரிமளம் ஒன்றியத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட 7 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்