உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம்
ஊட்டியில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
ஊட்டி
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் நீலகிரியில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை மூலம் பொதுமக்களிடம் இருந்து எத்தனை மனுக்கள் பெறப்பட்டது, அந்த மனுக்கள் மீது அந்தந்த துறை அலுவலர்கள் மூலம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்ணன், குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.