ஊரடங்கை மீறியவர்களை உறுதிமொழி எடுக்க வைத்த போலீசார்

ஊட்டியில் ஊரடங்கை மீறியவர்களை போலீசார் உறுதிமொழி எடுக்க வைத்தனர்.;

Update: 2021-06-01 17:35 GMT
ஊட்டி

கொரோனா பரவலை தடுக்க நீலகிரியில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை ஊட்டி கமர்சியல் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. அவசியமில்லாத காரணங்களை கூறி சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தி, சமூக இடைவெளி விட்டு வரிசையாக நிற்க வைத்தனர். 

பின்பு ஊரடங்கை மீறி வெளியே வந்ததால் போலீசார் உறுதிமொழி எடுக்க வைத்தனர். முழு ஊரடங்கை மீறி வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன். மீறி வந்தால் கொரோனா வார்டில் அனுமதிக்கப்படுவேன் என்று உறுதிமொழி எடுத்தனர்.  அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

 அதேபோல் ஏ.டி.சி., சேரிங்கிராஸ் பகுதியிலும் தேவையில்லாமல் சுற்றியவர்களை போலீசார் உறுதிமொழி எடுக்க வைத்தனர்.

மேலும் செய்திகள்