மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி்; போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிவாரண உதவிகளை வழங்கினார்.

Update: 2021-06-01 17:10 GMT
தூத்துக்குடி, ஜூன்:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை சார்பில் ஊரடங்கு காலத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி, காய்கறி அடங்கிய நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு திருமண மகாலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ டிரைவர்கள் 60 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்