வேலை வாய்ப்பு பதிவை பதிவஞ்சல் மூலமாக புதுப்பிக்கலாம். கலெக்டர் தகவல்

வேலை வாய்ப்பு பதிவை பதிவஞ்சல் மூலமாக புதுப்பிக்கலாம். கலெக்டர் தகவல்

Update: 2021-06-01 17:09 GMT
திருவண்ணாமலை

2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள அரசு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி உள்ளது. 

அதன்படி இச்சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் 3 மாதங்களுக்குள் அதாவது வருகிற ஆகஸ்டு 27-ந் தேதிக்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். 

அவ்வாறு இணையம் மூலம் பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்து கொள்ளலாம். 

இணையம் மூலமாக புதுப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற முகவரியை பயன்படுத்தி வருகிற ஆகஸ்டு 27-ந் தேதி வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்து கொள்ளலாம். 
இந்த தகவலை திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்