சாத்தான்குளத்தில் அங்கன்வாடி கட்டிடத்தை சேதப்படுத்திய மர்மநபர்கள்
சாத்தான்குளத்தில் அங்கன்வாடி கட்டிடத்தை மர்மநபர்கள் சேதப்படுத்தினர்.;
சாத்தான்குளம், ஜூன்:
சாத்தான்குளம் கீழரதவீதியில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து வகுப்புகள் நடத்தப்படும். இங்கு சிறுவர்களுக்கு விளையாட்டு பூங்காவும் அமைந்துள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு காலமாக இருப்பதால், இந்த கட்டிடத்தை சில மர்ம நபர்கள் உள்ளே சென்று செல்போன் பேசுவதும், அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவதுமாக இருந்து வந்தனர். இதை அறிந்த அங்கன்வாடி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மர்மநபர்களை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆயுதங்களுடன் உள்ேள நுழைந்து அங்கன்வாடி கட்டிட மேற்கூரை மற்றும் பூங்கா ஆகியவைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் யூனியன் அலுவலக அங்கன்வாடி அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மர்மநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.