3332 பேருக்கு கொரோனா 32 பேர் பலி

3332 பேருக்கு கொரோனா 32 பேர் பலி

Update: 2021-06-01 16:34 GMT
கொரோனா 32 பேர் பலி
கோவை

தமிழக அளவில் கொரோனா தினசரி பாதிப்பில் கோவை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஆனாலும் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 332 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்து 842-ஆக உயர்ந்தது. நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,936 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 965-ஆக உள்ளது.


கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
அதன்படி, கோவை அரசு மருத்துவ மனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 40 ஆயிரத்து 570 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 32 பேர் உயிரிழந்தனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1307-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்