மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் குடும்பத்தினருக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆறுதல்

கோவில்பட்டியில் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் குடும்பத்தினருக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.

Update: 2021-06-01 16:00 GMT
கோவில்பட்டி, ஜூன்:
கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜ நாராயணன் கடந்த மாதம் பாண்டிச்சேரியில் மரணம் அடைந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் இடைசெவல் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக அன்றைய தினம் கலந்து கொள்ள முடியாததால் கோவில்பட்டி தொகுதி சட்டசபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ நேற்று இடைசெவல் கிராமத்திற்கு சென்று எழுத்தாளர் கி.ராஜ நாராயணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தாமோதரன் ஆகியோர் சென்றனர்.

மேலும் செய்திகள்