திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ. ஆய்வு

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2021-06-01 12:07 GMT
இநத நிலையில் நேற்று திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மருந்து மாத்திரைகளின் விவரங்கள் குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சத்தான உணவுகள் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் தரமாக அளிக்க வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி, திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், பூண்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால், காஞ்சி பாடி சரவணன், இளைஞரணி துணை அமைப்பாளர் மோதிலால், சிட்டிபாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்