திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 865 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 865 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

Update: 2021-06-01 06:03 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதன் தாக்கம் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாகி வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. இதனை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மேலும் இதை குறைக்க மாவட்ட கலெக்டர் பொன்னையா அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் துரிதமாக செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 865 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 1,316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 91 ஆயிரத்து 698 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 8 ஆயிரத்து 237 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,381 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 13 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்