பொன்னேரி அருகே கொரோனா தொற்றுக்கு அ.தி.மு.க. பிரமுகர் சாவு

பொன்னேரி அருகே கொரோனா தொற்றுக்கு அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-06-01 05:53 GMT
பொன்னேரி, 

பொன்னேரி அடுத்த கோளுர் கிராமத்தை சேர்ந்தவர் மோகனவடிவேல் (வயது 60). 15 ஆண்டுகளுக்கும் மேலாக மீஞ்சூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி மோகனவடிவேல் (51) இவர் பெரும்பேடு கவுன்சிலராக தேர்வு பெற்று மீஞ்சூர் ஒன்றிய குழுத்தலைவராக 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அ.தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்