கொரோனாவால் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளை பாதுகாக்க கலெக்டர் தலைமையில் குழு அமைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளை பாதுகாத்து, பராமரிக்க கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-05-30 18:32 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளை பாதுகாத்து, பராமரிக்க கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

குழு அமைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்து பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாத்து, பராமரிக்க கலெக்டர் தலைமையில் குழு அமைத்து செயல்பட அரசு உத்தரவிட்டது. இதன்படி 9 பேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக கலெக்டர் மதுசூதன்ரெட்டி இருக்கிறார். செயலாளராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன் ஜார்ஜ், உறுப்பினர்களாக மருத்துவ இணை இயக்குனர் இளங்கோ மகேஷ்வரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி, சிவகங்கை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் குணா, மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, குழந்தைகள் நலக்குழு தலைவர் சரளா கணேஷ், மாவிடுதிக்கோட்டை கேத்ரின் மெர்சி ஹோம் செயலர் கிறிஸ்டோபர் டேவிட் சார்லஸ் ஆகிய 9 பேர் உள்ளனர்.

உதவ நடவடிக்கை

இந்த குழு 15 நாட்களுக்கு ஒருமுறை பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். கொரோனாவால் பாதித்த, இறந்தவர்களின் குழந்தைகள் நிலை குறித்து கண்டறிந்து, அவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்க உதவும். அரசின் உதவித்தொகை அவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யும்.
இந்த தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்