காவேரிப்பாக்கம் அருகே ஏரி மண் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல்

காவேரிப்பாக்கம் அருகே ஏரி மண் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல்

Update: 2021-05-30 17:26 GMT
காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார் காவேரிப்பாக்கம் அருகே பாகவெளி பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது ஏரி வழியாக வந்த 3 டிராக்டரை போலிசார் மடக்கினர். போலிசாரை கண்டதும் டிரைவர்கள் வண்டியை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர். போலீசார் டிராக்டரை சோதனை செய்ததில் ஏரி மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 3 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்