வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது

வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-29 20:32 GMT
மதுரை,

ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க கோரி போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மதுரையில் தீவிர ரோந்து சென்றனர். இந்த நிலையில் எஸ்.ஆலங்குளம் பகுதியில் ஒரு வீட்டில் ஒருவர் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மது விலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய அசோக்குமார் (வயது 31) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்