திருச்சியில் கொரோனா தடுப்பு பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
திருச்சியில் கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவர்கள், செவிலியர்கள் 3 மாத தற்காலிக பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் எஸ்.சிவராசு கூறியுள்ளார்.;
திருச்சி,
திருச்சியில் கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவர்கள், செவிலியர்கள் 3 மாத தற்காலிக பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் எஸ்.சிவராசு கூறியுள்ளார்.
தற்காலிக பணி
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிகமாக 3 மாதத்திற்கு மட்டும் தொகுப்பூதியத்தில் பணியாற்ற 57 மருத்துவர்களும், 55 செவிலியர்களும், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் 5 பேரும், டயாலிசிஸ் டெக்னீசியன் 2 பேரும், பிரேதபரிசோதனை அரங்கு உதவியாளர் 3 பேரும், மணிபோல்டு டெக்னீசியன் 2 பேரும் என உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விருப்பமுள்ள நபர்களில் மருத்துவர்கள் மட்டும் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கும், மற்ற இதர பிரிவினர் 1-ந் தேதி காலை 10 மணிக்கும், கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நேரடியாக கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். இந்த தொகுப்பூதிய பணியிடங்களுக்கான ஊதியம் அரசு விதிகளின்படி வழங்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு வரும் போது கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றுடன் வரவேண்டும்.
விண்ணப்பங்கள் வரவேற்பு
எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள மருத்துவர்கள் மட்டும் நாளைக்குள்ளும், இதர பிரிவினர் 1-ந் தேதி அன்றும் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நேரடியாக கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தொிவித்துள்ளார்.