ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு புதிய இணையதள முகவரி
ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு புதிய இணையதள முகவரியை தென்னக ரெயில்வே அறிமுகம் செய்தது. இதுவிரைவில் தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
திருச்சி,
ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு புதிய இணையதள முகவரியை தென்னக ரெயில்வே அறிமுகம் செய்தது. இதுவிரைவில் தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இணையதள முகவரி
ரெயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் தகவல்களை அவர்களது உறவினர்கள் தெரிந்து கொள்ள தென்னக ரெயில்வே சார்பில் orh.railnet.org.in என்ற இணையதள முகவரியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவை சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் குறித்த தகவல்களை மட்டுமே பெற முடியும்.
இந்த இணையதள முகவரியில் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் அவர்களது உறவினர்கள் விருப்பத்தின் பெயரில் மட்டும் தான் வழங்கப்படுகிறது. இதில் ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களின் தற்போதைய நிலை என்ன? என்பது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., ஆர்.ஏ.டி., சி.டி. ஸ்கேன்., போன்ற பரிசோதனை செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் இந்த இணையதளத்தில் வழங்கப்படுகிறது. நோயாளிகள் டிஸ்சார்ஜ் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தல் போன்ற தகவல்களும் இடம் பெற்றுள்ளது.
கொரோனா நோயாளி
இந்த சேவை தமிழகம் முழுவதும் விரையில் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொரோனா சிகிச்சை பெரும் நோயாளிகளின் நிலைமை குறித்து தெரிந்து கொள்ள அவர்களது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தின் முன்பு கூட்டம் கூடுவதை தவிர்க்கவே இந்த இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.