மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது
மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோமரசம்பேட்டை,
சோமரசம்பேட்டை அருகே உள்ள கொய்யாத்தோப்பு பாலம் அருகில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி செல்வதாக அதவத்தூர் கிராம நிர்வாக அதிகாரி விக்னேசுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு சென்று பார்த்த போது 2 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி சென்று கொண்டிருந்தனர். உடனே 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து சோமரசம்பேட்ைட போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்தி சென்ற சாத்தனூரை சேர்ந்த சக்திவேல் (வயது 31), மதன் (22) ஆகியோரை கைது செய்தனர்.