நெல்லை மாவட்டத்தில் 34 வாகனங்கள் பறிமுதல்
நெல்லை மாவட்டத்தில் 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நேற்று விதிகளை மீறிய வாகனத்தில் சுற்றித்திரிந்த 28 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 318 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 11 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.