நெல்லை:
நெல்லை அருகே கங்கைகொண்டான் தனியார் ஆலை அருகே நேற்று அதிகாலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் திடீரென்று அந்த நபரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.