சேரன்மாதேவி பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

சேரன்மாதேவி பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-05-29 18:52 GMT
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

மூதாட்டி

சேரன்மாதேவி மேலநாலாம் தெருவைச் சேர்ந்தவர் கணபதி மனைவி வேலம்மாள் (வயது 74). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வேலம்மாள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

கூலித் தொழிலாளி

சேரன்மாதேவி அருகே உள்ள சடையபுரம் பகுதி சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசிங் (58). கூலித்தொழிலாளி. இவரது தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயசிங் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஜெயசிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்