நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 897 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 30,423 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 30,423 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்:
897 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 544 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்டங்களை சேர்ந்த 18 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,526 ஆக குறைந்தது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 897 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,423 ஆக அதிகரித்து உள்ளது.
6,281 பேருக்கு சிகிச்சை
மாவட்டத்தில் 408 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 23 ஆயிரத்து 908 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 234 பேர் இறந்து விட்ட நிலையில், 6,281 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் முழு ஊரடங்கு மற்றும் அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.