முன்கள பணியாளர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்
முன்கள பணியாளர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது;
கரூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன்கள பணியாளர்களான போலீசார், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் விதமாக கபசுரக்குடிநீர், பிஸ்கட், சுண்டல் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கரூர் பசுபதிபாளையம், சிண்டிகேட், பஸ் நிலையம், முனியப்பன் கோவில் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கபசுரகுடிநீர், பிஸ்கட், சுண்டல் ஆகியவை நேரடியாக வழங்கப்பட்டது. இதில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் மதரஸா பாபு, சுலைமான் சேட், ஜாகீர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.