எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே புழுதிபட்டி-பொன்னமராவதி சாலையோரத்தில் உள்ள கண்மாயில் பனைமர வேரின் அடிப்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று முட்டையிட்டு அடைகாத்து வருகின்றது. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆடு, மாடுகளை மேய்க்கும் போது பனைமர பொந்தினுள் மலைப்பாம்பு இருப்பதை கண்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் மலைப்பாம்பு அடைகாப்பதை அறிந்து ஒன்றும் செய்யாமல் விட்டு சென்றனர். இந்த கண்மாயில் இது போல் மலைப்பாம்புகள் அடிக்கடி வருவதும், போவதும் இயல்பான ஒன்றுதான் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.