தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா பாதித்த மூதாட்டி திடீர் மாயம்-போலீசார் விசாரணை
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா பாதித்த மூதாட்டி திடீரென மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த மூதாட்டி அங்கிருந்து திடீரென மாயமானார். அவர் எங்கே சென்றார் என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.