50 திருநங்கைகளுக்கு இலவச அரிசி- போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடியில் 50 திருநங்கைகளுக்கு இலவச அரிசியை, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்.

Update: 2021-05-29 15:59 GMT
தூத்துக்குடி, மே:
தூத்துக்குடியில் முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று மாவட்ட காவல்துறை சார்பில் வி.வி.டி சிக்னல் அருகே கொரோனா கால நிவாரணமாக 50 திருநங்கைகளுக்கு மதிய உணவு மற்றும் அரிசிப்பை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்துகொண்டு திருநங்கைகளுக்கு மதிய உணவு மற்றும் அரிசிபைகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தூத்துக்குடி நகர துணை சூப்பிரண்டு கணேஷ், இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜன், சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்