காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் குறித்து கணக்கெடுப்பு

திருப்பூர் மாநகர பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புள்ளவர்கள் குறித்து சுகாதார பணியாளர்கள் வீடுகள் தோறும் விசாரணை நடத்தி வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு இருக்கிறவர்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது.

Update: 2021-05-29 15:43 GMT
திருப்பூர்
திருப்பூர் மாநகர பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புள்ளவர்கள் குறித்து சுகாதார பணியாளர்கள் வீடுகள் தோறும் விசாரணை நடத்தி வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு இருக்கிறவர்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது.
காய்ச்சல் பாதிப்புள்ளவர்கள் குறித்து
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநகர் பகுதிகளில் தொழிலாளர்கள் அதிகம் இருந்து வருவதால், இந்த பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் இதனை கண்டறியும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாநகர் பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் விசாரணையும் சுகாதார பணியாளர்கள் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பான அறிக்கை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வழங்கப்படுகிறது.
கணக்கெடுப்பு
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது
திருப்பூர் மாநகர பகுதியில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்கனவே 350 சுகாதார பணியாளர்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகிற பணியாளர்கள் வாரத்தில் 2 நாட்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு சென்று கணக்கெடுப்பார்கள். மீதமுள்ள நாட்களில் மாநகர் பகுதிகளில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு பகுதிகளுக்கு செல்வார்கள்.
கடந்த சில நாட்களாக கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இருப்பினும் விரைவாக தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால், மண்டலத்திற்கு 100 பேர் என இன்னும் கூடுதலாக 400 பேர் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இவர்களும் நாளைதிங்கட்கிழமை முதல் கணக்கெடுப்பு பணியை தொடங்க இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்