ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி சாவு

கோவில்பட்டியில் ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2021-05-29 15:20 GMT
கோவில்பட்டி, மே:
கோவில்பட்டி அன்னை தெரேசா நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 52). இவர் எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மொபட்டில் புதுரோடு சந்திப்பில் சென்றபோது எதிரே வந்த ஆம்புலன்ஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனியப்பனை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல்உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா, ஆம்புலன்ஸ் டிரைவர் வடக்கு திட்டங்குளத்தை சேர்ந்த மாரிமுத்துப்பாண்டி (36) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்