ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 19 பேர் பலி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 19 பேர் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொடர்பாக நேற்று வெளியான பரிசோதனை முடிவுகள்படி 493 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 4 ஆயிரத்து 760 பேர் கொரோனா நோய் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்றின் காரணமாக 19 பேர் உயிரிழந்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.