கலவை அருகே; 20 ஆயிரம் சவுக்கு மரங்கள் தீயில் கருகின
கலவை அருகே 20 ஆயிரம் சவுக்கு மரங்கள் தீயில் கருகின.
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மாம்பாக்கம் உள்வட்டத்தில் சொரையூர் கிராமத்தில் ராஜி என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கர் சவுக்கு தோப்பு உள்ளது. இந்தநிலையில் சவுக்கு தோப்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கலவை தீயணைப்பு நிலைய அலுவலர் பரிமளாதேவி தலைமையில் தீயணைப்பு வீரர்களும், மீட்புப்பணி குழுவினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் 20 ஆயிரம் சவுக்கு மரங்கள் தீயில் எரிந்து கருகின.
இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.