குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகள்

குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகள்

Update: 2021-05-29 15:03 GMT
உடுமலை, 
உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் சேகரமாகும் குப்பைகள் மற்றும் காய்கறிகழிவுகள் வாரச்சந்தை வளாகத்தின் தெற்கு பகுதியின் மூலையில் கொட்டப்பட்டு வருகின்றன. இவை அப்புறப்படுத்தப்படாமல் பல நாட்களாக குவிந்து கிடக்கிறது. அங்கு கொட்டப்பட்டுள்ள தக்காளிகள் மற்றும் காய்கறி கழிவுகள் கெட்டுபோய், அவற்றில் புழுக்கள் உற்பத்தியாகியுள்ளன. அதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த நிலையில் அந்த இடத்திற்கு அருகில் கடந்த 26ந்தேதி முதல் காய்கறி கமிஷன் மண்டிகள் செயல்பட்டு வருகிறது.
மேலும் அந்த பகுதிக்கு விவசாயிகள், வியாபாரிகள், வாகன டிரைவர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் என தினசரி காலை 5.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் 5 மணி நேரத்தில் 600க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். எனவே அந்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள காய்கறி கழிவுகள் மூலம் நோய் தொற்றும் அபாயம் உள்ளதால் அந்த கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்