கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசு மீட்பு
போடியில், கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசு மீட்கப்பட்டது.;
போடி:
போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நடுநிலைபள்ளியின் பின்புறத்தில் நேற்று மாலை பசு மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அந்த பசு, அருகே இருந்த கழிவுநீர் தொட்டி மீது ஏறி நின்றது.
அப்போது திடீரென கழிவுநீர் தொட்டி உடைந்தது. இதனால் அந்த பசு, கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர், போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ஒரு மணி நேரம் போராடி பசுவை உயிருடன் மீட்டனர்.