தடுப்பூசி போடுவதற்கு அலைமோதிய கூட்டம்

கம்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்கு கூட்டம் அலைமோதியது.;

Update:2021-05-29 17:55 IST
கம்பம்:

கம்பம் அரசு மருத்துவமனை, நகர்ப்புற சுகாதார நிலையத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதனால் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் தினமும் மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி போடாமல் திரும்பி சென்றனர்.

 இந்தநிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்காக, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசிகள் வந்தன. 

இதையடுத்து நேற்று முதல் கம்பம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. 

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், தடுப்பூசி போடுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படையெடுத்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது.

இதனையடுத்து நகராட்சி சுகாதார அலுவலர் அரசக்குமார் தலைமையில் சுகாதாரத்துறையினர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தனர். 

பின்னர் அங்கு திரண்டிருந்த பொதுமக்களை சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்க வைத்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
----

மேலும் செய்திகள்