தனியார் நிலத்தில் மண் அள்ளிய 2 லாரிகள், பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தனியார் நிலத்தில் மண் அள்ளிய 2 லாரிகள், பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-05-29 12:23 GMT

வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள மொட்டணம்பட்டியில் மர்ம நபர்கள் அனுமதியின்றி தனியார் நிலத்தில் மண் அள்ளி லாரியில் கடத்துவதாக வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 4 பேர் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி 2 டிப்பர் லாரிகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் தனிப்படை போலீசார் அங்கிருந்த 2 டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
போலீசார் நடத்திய விசாரணையில் தப்பி ஓடிய நபர்கள் கம்பிளியம்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி (வயது 42), சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த சீமான்ஜெகநாதன் (34), பாலகவுண்டன்பட்டியை சேர்ந்த ஆனந்தன் (21), மொட்டணம்பட்டியை சேர்ந்த முருகேசன் (30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் தேடி வருகிறார்.


மேலும் செய்திகள்