அவனியாபுரம் பகுதியில் 31ந்தேதி மின் தடை
அவனியாபுரம் பகுதியில் 31ந்தேதி மின் தடை செய்யப்படுகிறது.
மதுரை,மே
மதுரை அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் வருகிற 31-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பெரியசாமி நகர், திருப்பதி நகர், சி.ஏ.எஸ். நகர், சொக்குபிள்ளை நகர், அண்ணாநகர், அக்ரஹாரம், புரசரடி, ஜே.பி.நகர், திருப்பரங்குன்றம் ரோடு, எம்.கே.எம். நகர், எஸ்.கே.ஆர். நகர், ராஜீவ்காந்தி நகர், பாம்பன் நகர், சந்தோஷ் நகர், தென்பரங்குன்றம், காசி தோட்டம், பெரிய ரத வீதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று மின் வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.