புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்
புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புளியங்குடி:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லட்சத்தீவு நிர்வாக அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டதில் இருந்து அங்கு பல்வேறு மக்கள் விரோத சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இதை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நேற்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. புளியங்குடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அங்குள்ள அலுவலகம் முன்பு நகர தலைவர் அப்துல் வகாப் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்காசி மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், துணைத்தலைவர் கலீல் ரகுமான், வக்கீல் ஜாகிர் அப்பாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய செயலாளர் புளியங்குடி அமீன் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைச்செயலாளர் அப்துல் வகாப், மாணவர் பேரவை மாவட்ட தலைவர் அபுசாலி, தொகுதி அமைப்பாளர் முகம்மது இஸ்மாயில், இளைஞர் அணி செய்யது அலி பாதுஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் ஹபீபுல்லாஹ் நன்றி கூறினார்.