ஊரடங்கால் முடங்கிய சுமைதூக்கும் தொழிலாளர்கள்

அரியலூரில் ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டதால், சுமைதூக்கும் தொழிலாளர்கள் முடங்கியுள்ளனர்.;

Update: 2021-05-28 19:48 GMT
அரியலூர்:

கடைகள் மூடல்
கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் அரியலூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்குக்கு முன்பு தினசரி சென்னை, சேலம், மதுரை, கோவை, திருச்சி, ஒட்டன்சத்திரம், ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் இருந்து மளிகை பொருட்கள், காய்கறி, மருந்துகள், இரும்பு மற்றும் பூ, பழங்கள் ஆகியவை நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் அரியலூருக்கு கொண்டு வரப்படும்.
அவற்றை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடைகளில் சேர்ப்பார்கள். மேலும் சரக்குகளை வேறு லாரிகளில் மாற்றும் பணியிலும் அவர்கள் ஈடுபடுவார்கள். சுமை தூக்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கையை ஓட்டி வந்தனர்.
வாழ்வாதாரம் முடங்கியது
தற்போது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் லாரிகள் வருவது முற்றிலும் குறைந்து போனது. இதனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் 7-ந் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அரசு நேற்று அறிவித்துள்ளது. இதனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள், தட்டு ரிக்‌ஷா ஓட்டுனர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்