ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரியும் இளைஞர்கள்
ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரியும் இளைஞர்களால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பரவிய நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆனால், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்தும் செந்துறை பகுதியில் இளைஞர்களும், பொதுமக்களும் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றனர். இதனால் செந்துறையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து மேலும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வெளியே தேவையின்றி சுற்றித்திரிபவர்களை தடுக்க போலீசார், சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.