விருதுநகரில் இன்று மின்தடை
விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்,
விருதுநகர் சீதக்காதி தெரு, பெருமாள் கோவில் தெரு, மேலத்தெரு, பாத்திமா நகர், நகராட்சி அலுவலக ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின் வினியோகம் நிறுத்தப்படும். அதேபோன்று இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை இந்நகர் பாவாலிரோடு, பழைய பஸ் நிலையம், பாரதி நகர், மதுரை ரோடு, டி.கே.எஸ்.பி. நகர், வேலுச்சாமி நகர் மற்றும் போக்குவரத்து கழக பணிமனை முதல் வி.வி.வி. கல்லூரி வரை உள்ள கிழக்குப் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதேபோல ஆமத்தூர், வெள்ளூர், மூளிப்பட்டி, புதுப்பட்டி, நடுவப்பட்டி, இ.குமாரலிங்கபுரம், அழகாபுரி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், கூரைக்குண்டு, மாத்திநாயக்கன்பட்டி, இனாம் ரெட்டியபட்டி, சூலக்கரை, கணபதிமில்காலனி, ஜி.என்.பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மின்வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.