பரப்பாடி அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய 6 பேர் மீது வழக்கு

பரப்பாடி அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-05-28 19:22 GMT
இட்டமொழி:

மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்த முத்துமனோ என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டபோது படுகொலை செய்யப்பட்டார்.

இதனை கண்டித்தும், இதற்கு காரணமான சிறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாங்குநேரி தொகுதியில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. 

நேற்று பரப்பாடி அருகே உள்ள கக்கன்நகரை அடுத்த சடையனேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுதொடர்பாக ஆரோக்கியராஜ் (வயது 25), பழனி (60), முத்துப்பாண்டி (47), சப்பாணிதுரை (36), பாலசுப்பிரமணியன் (52), முகேஷ் (24) ஆகிய 6 பேர் மீது வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்