ஊரடங்கு விதிகள் மீறல்: நெல்லை மாவட்டத்தில் 42 வாகனங்கள் பறிமுதல்

நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 42 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-05-28 19:15 GMT
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுபடி ஊரடங்கு விதிகளை மீறுவோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 39 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 42 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 272 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 9 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்