போலி டாக்டர் கைது

அருப்புக்கோட்டை அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-28 19:10 GMT
விருதுநகர், 
அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் போலி மருத்துவர் ஒருவர் ஆங்கில முறை மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக தகவல் கிடைத்ததன் பேரில் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் வெங்கடேஸ்வரன் போலீசாருடன் செம்பட்டி சென்று விசாரணை நடத்தினார். அங்கு நடுத்தெருவில் வெள்ளைக்கோட்டையைச சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 60) என்பவர் கடந்த 2 வருடங்களாக ஆங்கில முறை மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். சண்முக சுந்தரம் எஸ்.எஸ்.எல்.சி. மட்டுமே படித்துள்ளார். மேலும் மருத்துவ சிகிச்சை அளிக்க எந்த பதிவு செய்தும் கொள்ளவில்லை. அவரது ஆஸ்பத்திரிக்கு சென்று சோதனை நடத்தியபோது அங்கு அவர் ஆங்கில மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வைத்திருந்தார். இதுபற்றி அருப்புக்கோட்டை டவுன் போலீசில் டாக்டர் வெங்கடேஸ்வரன் புகார் செய்தார். போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணையில் அவர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மூத்த டாக்டர் ஒருவரின் பெயரை பயன்படுத்தியதாக தெரியவந்தது. இந்நிலையில் நகர்ப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் மருந்துக்கடைகளில் பதிவுபெற்ற டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை வினியோகிக்க கூடாது என கலெக்டர் கண்ணன் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்