ஓசூரில், மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் பீரோவை உடைத்து பணம், சால்வைகள் திருட்டு

ஓசூரில், மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் பீரோவை உடைத்து பணம், சால்வைகள் திருட்டு

Update: 2021-05-28 19:04 GMT
ஓசூர்:
ஓசூரில் உள்ள நேதாஜி சாலையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. இதனை மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் நிர்வகித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள், ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள சால்வைகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து முரளிதரன் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=====

மேலும் செய்திகள்