திருச்சி விமான நிலையத்தில் ரூ.86 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்; 2 பயணிகளிடம் விசாரணை
இதுதொடர்பாக 2 பயணிகளிடம் விசாரணை நடத்தடப்பட்டு வருகிறது
செம்பட்டு,
சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது, கள்ளக்குறிச்சியை சேர்ந்த பழனி (வயது 39) என்ற பயணி தனது உடலில் பசை வடிவில் 900 கிராம் தங்கத்தையும், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த செல்வராஜ் (28), என்பவர் தனது உடலில் 800 கிராம் தங்கத்தையும் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.86 லட்சம் ஆகும்.